அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ 1 1/2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. அந்த சந்தைக்கு அந்தியூர், அம்மாபேட்டை, கோபி, மேட்டூர், கொளத்தூர், கொங்கணாபுரம், எடப்பாடி, கர்நாடக மாநிலம் மைசூரு, ராமாபுரம், கொள்ளேகால் என பல்வேறு பகுதியிலிருந்து பெரும்பாலான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அங்கு 80 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை ஜோடி கொங்கு காளை மாடானது விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து காங்கேயம் காளை மாடானது ஜோடி 70 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த கால்நடை சந்தையில் ஈரோடு, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலான வியாபாரிகள் கலந்துகொண்டு மாடுகளை விலைபேசி பிடித்து சென்றனர்.