Categories
உலக செய்திகள்

தைவான் வான்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன விமானங்கள்.. வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு..!!

தைவான் அரசு, சீன விமானப்படையை சேர்ந்த விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் புகுந்ததாக குற்றம் சாட்டியிருக்கிறது.

சீனா மற்றும் தைவான் நாடுகள் கடந்த 1949ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு தனித்தனி நாடுகளாக பிரிந்தது. எனினும் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் படை பலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று மிரட்டல் விடுத்து வருகிறது.

மேலும், தைவானை முழுமையாக கைப்பற்றுவதற்கும் சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமன்றி, சீன ராணுவம் அடிக்கடி தைவானுக்குள் அத்துமீறி சென்று அவர்களின் ராணுவத்தினருடன் மோதி வருகிறது. இந்நிலையில் தைவான் அரசு, தங்களது வான் எல்லையை மீறி சீனாவின் விமானப்படையை சேர்ந்த 19 விமானங்கள் நுழைந்துள்ளது என்று குற்றம் சாட்டியிருக்கிறது.

அணு ஆயுதத்தை ஏந்திய விமானங்களும் அதில் இருந்ததாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தைவானின் வெளியுறவுத்துறை தெரிவித்திருப்பதாவது, சீன விமானப்படையைச் சேர்ந்த, ஜே 16 வகை ஜெட் விமானங்கள், எச் 16 வகை விமானங்கள் என்று 19 விமானங்கள் தங்களது வான் எல்லையில் நுழைந்தது. அதன்பின்பு எங்களது விமானப்படை, அவற்றை விரட்டியதாக  தெரிவித்திருக்கிறது. எனினும், தற்போது வரை சீனா, இதுகுறித்து எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |