Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

BREAKING: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி …!!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருக்கிறது. இதனுடைய முக்கியத்துவம் என்னவென்று பார்த்தால் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பது இதற்கான முக்கியத்துவமாக இருக்கிறது.

அதே போல மீனவர்கள் அரபிக்கடலில் சில பகுதியிலும் , தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இப்போது உருவாகி இருக்க கூடிய இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக நேரடியாக ஒரு பலத்த மழை என்பது தமிழகத்திற்கு இல்லை என்றாலும் கூட தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப் பட்டிருக்கிறது.

Categories

Tech |