Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்கள்…. நடைபெற்ற நிகழ்ச்சி….!!

13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கலெக்டர் வழங்கியுள்ளார்.

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கொடுக்கும் நிகழ்ச்சியானது ஈரோட்டில் உள்ள கலெக்டரின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். அப்போது தேர்வான 13 ஆசிரியைகளுக்கு விருது, வெள்ளிப்பதக்கம் மற்றும் 10 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதனையடுத்து கலெக்டர் பேசியபோது 2-வது குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி பெருமைபடுத்துகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த விருது பெறும் 13 ஆசிரியர்கள் தங்களை போன்று மாணவர்களும் பல்வேறு விருதுகளை பெற வேண்டும் என்ற வகையில் அவர்களுக்கு முனைப்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும் என்றனர்.

இதனைதொடர்ந்து சித்தோடு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசபாபதி, குட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகரன், மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன், பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணன், ஈ.கே.எம். அப்துல்கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலை பள்ளி பட்டதாரி சேட்டுமதார்சா, சென்னிமலை ஒன்றியம் சிறுகளஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணி, சத்தியமங்கலம் ஒன்றிய காடகநல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நம்பிக்கை மேரி, தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஏழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி இடைநிலை ஆசிரியர் சுமதி, அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர் ரஞ்சித்குமார், கோபி ஒன்றியம் அவ்வையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தீபலட்சுமி, பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கொங்கு வேளார் பதின்ம மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ரவிக்குமார், பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் விரிவுரையாளர் சுமதி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் புனிதவதி போன்ற 13 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கல்வி அலுவலர் மான்விழி, கல்வி அலுவலர்கள் சிவக்குமார், மாதேசன், பழனி, அன்பழகன், ராமன் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |