Categories
உலக செய்திகள்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட்…. படக்குழுவினர்களுடன் இணையும் தனுஷ்…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகின் இயக்குநரான நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் ரசிகர்களால் தளபதி என்று மிகவும் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தமிழ் திரையுலகின் இயக்குனரான நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்காக தமிழ் திரையுலகின் நடிகரான தனுஷ் தளபதி விஜயின் குரலை பயிற்சி எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வெளியான தகவல் நடிகர் தனுஷ் மற்றும் தளபதி விஜயின் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Categories

Tech |