தமிழகத்தில் கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்கான சட்ட முன்வடிவு சட்ட பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன், 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்து, சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார்.. செப்டம்பர் 13ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் இது நிறைவேற்றப்பட இருக்கிறது..
தமிழத்திலுள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய தொழிலாளர்கள் வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப் படுகிறார்கள்.. நிற்க வைக்கப்படுவதால் உடல் நலக் கேடுகளுக்கு ஆளாகிறார்கள்.. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் இருக்கைகளில் அமரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..