தமிழ் திரையுலகின் இயக்குனரான அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ரெடியாகும் படத்திற்கான சூட்டிங்கிலிருந்து தற்போது அதிரடியான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் டாப் இயக்குனர்களில் ஒருவராக அட்லியும் திகழ்கிறார். இவர் தற்போது ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை பாலிவுட்டில் எடுக்கவுள்ளார். மேலும் அட்லி இயக்கும் இந்த பாலிவுட் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபல நடிகையான நயன்தாரா மற்றும் யோகி பாபு உட்பட பலரும் களமிறங்கவுள்ளார்கள்.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் டாப் இயக்குனரான அட்லி தற்போது இயக்கி வரும் பாலிவுட் திரைப்படத்தின் சூட்டிங் புனேவிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அதிரடியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாராவும், பாலிவுட் நடிகரான ஷாருக்கானும் உள்ளார்கள்.