Categories
உலக செய்திகள்

“தலீபான்களுடன் பேச தயாராக உள்ளோம்!”.. எதிர்ப்பு குழுவின் தலைவர் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின், எதிர்ப்புக் குழுவின் தலைவராக உள்ள அகமது மசூத், தலீபான்களுடன் பேச்சுவார்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு புதிய ஆட்சியை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் 34 மாகாணங்களில், 33 மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்களால், இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே இருக்கும் பஞ்ச்ஷீர் என்ற மாகாணத்தை கைப்பற்ற முடியவில்லை.

இதனிடையே, நாட்டின் துணை அதிபராக இருந்த அமருல்லா சாலே, தன்னை ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபர் என்று அறிவித்தார். தற்போது இவரின் தலைமையில் தான், தலீபான்களுடன் பஞ்ச்ஷீர் மாகாணத்தின் போராளிகள், மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், எதிர்ப்புக் குழுவின் தலைவராக உள்ள அகமது மசூத் தலிபான்களுடன் பேசுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக கூறியிருக்கிறார்.

மேலும், இதற்கு முன்பே, தலிபான்கள் பஞ்ச்ஷீர் மாகாண தலைநகரை சுற்றி அமைந்துள்ள மாவட்டங்கள் கைப்பற்றப்பட்டது என்றும் மாகாணத்தின் தலைநகருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அறிவித்திருந்தனர். அதன்பின்பே, அகமது மசூத் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

Categories

Tech |