Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது… வழக்குகளை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!!

நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் செப்டம்பர் 12 இல் நடப்பதால் அந்த நீட் தேர்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று சில மாணவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது..

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சில மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக 16 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது.. தேர்வு தேதி என்பது பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது என்பதற்காக அதனை மாற்ற முடியாது.. எனவே திட்டமிட்டபடி செப்., 12ல் நீட் தேர்வு  நடைபெறும்.. எனவே இந்த மனுக்களை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்தது..

 

Categories

Tech |