Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“4 மாசமா வேலை பாக்குறேன்” தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் தான் பாட்டிலில் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் குமாரசாமி என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக குமாரசாமி பெரியநாயக்கன் பாளையத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கேட்ட போது அவர்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த குமாரசாமி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |