தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பூங்கா அருகில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்த 2000 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக விஜய், மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.