Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொந்தரவு…. 6 ஆண்டுகள் கொடுமைப்படுத்திய தந்தை…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலி தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் நகை பட்டறை தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக இவரது மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளி தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனை அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூலி தொழிலாளியை கைது செய்துள்ளனர். மேலும் மனைவிக்கு தெரியாமலேயே கடந்த 6 ஆண்டுகளாக தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |