ஜப்பான் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 19 பதக்கங்களை பெற்று இந்தியா 24 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் தலைநகரில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 163 நாடுகளினுடைய சுமார் 4,500 வீரர்களும் வீராங்கனைகளும் களமிறங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் டோக்கியோவில் நடைபெற்று வந்த 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கோலாகலமாகவும், கலை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெற்றுள்ளது.
இவ்வாறு நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தமாக 19 பதக்கங்களை வென்று 24 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவின்போது இந்தியாவின் சார்பாக அவனி லெகரா இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்றுள்ளார்.