தாய் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் அசோக் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவதர்ஷினி என்ற மகளும், சிவனேசன் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் நடத்தி வரும் ஹோட்டலில் வேலை பார்த்து விட்டு அசோக் ராஜபாண்டியும், சிவனேசனும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து ராஜலட்சுமியும், சிவதர்ஷினியும் தூக்கில் தொங்குவதை பார்த்து ராஜபாண்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் அசோக் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேறொரு பெண்ணுடன் ராஜபாண்டி அடிக்கடி செல்போனில் நீண்ட நேரமாக பேசியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பேசாமலேயே இருந்துள்ளனர். எனவே மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.