வரும் 10,11,12 ஆம் தேதி தொடர்ந்து 3 நாள் விடுமுறை விடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14ஆம் தேதி வேளாண் நிதி அறிக்கை பின்னர் திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகின்றது. பின்னர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி செப்டம்பர் 21-ஆம் தேதி மொத்தம் 29 நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு, கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் கூட்டத்தொடர் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் 13-ம் தேதி நிறைவு பெறும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை நடைபெறும் நாட்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி எட்டாம் தேதி ஒரு நாள் மட்டும் காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டப்பேரவை நடக்கும். அதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியின் மறுநாளான 11ஆம் தேதி சனிக்கிழமை பேரல் அலுவல் கிடையாது. இதனால் 10,11,12 ஆம் தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.