Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. தந்தை மற்றும் மகள் காயம்…. கைது செய்த போலீசார்….!!

சாலையை கடக்க முயன்ற தந்தை மற்றும் மகளை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக வந்து மோதியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பிராட்போர்ட் சாலையை ஒரு ஆண் தனது 2 வயது கைக்குழந்தையுடன் கடந்துள்ளார். அப்பொழுது தீடிரென கட்டுப்பாட்டை இழந்து வந்த வேகமான மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்களின் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் சாலையிலேயே 30 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.  மேலும் இந்த விபத்தில் 2 வயது கைக்குழந்தை லேசான காயங்கள் மட்டும் கீறல்கள் உடன் உயிர் தப்பியுள்ளது. ஆனால் அந்த 32 வயதான நபருக்கு கால்கள் மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவசர மருத்துவக் குழுவின் உதவியால் இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாயமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து சாலை போக்குவரத்து போலீசார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “மோட்டார் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தவறான பாதையில் விரைந்து வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை செய்து போலீசாரால் அந்த ஓட்டுநர்  கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |