Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு சென்ற நபர்…. திடீரென நடந்த விபரீதம்…. பரிசோதனை அறிக்கையில் தெரிந்த உண்மை…!!

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்திற்காக கடந்த மாதம் பரமத்திவேலூர் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டின் கதவை முன்புறமாக பூட்டி விட்டு வீட்டிற்குள் பதுங்கி இருப்பது காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்து பரமத்தி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற சிறிது நேரத்திலேயே மணிகண்டன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மணிகண்டனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைதொடர்ந்து அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீரென உயிரிழந்ததால் நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அவருடைய முன்னிலையில் மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது மணிகண்டனின் உடல் உறுப்புகள் சில நிறம் மாறி இருந்துள்ளது.

இதனையறிந்த காவல்துறையினர் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணிகண்டனின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரை குப்பிகள் கிடந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் முடிவுகள் வந்த பின்னரே மணிகண்டன் இறப்பிற்க்கான காரணம் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |