Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டில் சாராய ஊறல் போட்டு வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் காவல்துறையினர் கோவிலூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மேல்கோவிலூர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வீட்டிற்கு பின்புறம் வைக்கப்பட்டு இருந்த 30 லிட்டர் சாராய ஊறலையும் காவல்துறையினர் கண்டுபிடித்து அதனை கொட்டி அழித்தனர். இதனையடுத்து முருகேசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |