Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விபத்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர்களுக்கு நடுவில் மோட்டார் சைக்கிள் சிக்கிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலம் அமைந்து இருக்கின்றது. இந்தப் பாலத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு சாலை போடும் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களுக்கு நடுவில் சிக்கி கொண்டார். இதனால் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விபத்தில் உயிரிழந்த வாலிபர் பானம்புத்தூர்குடிகாடு பகுதியில் வசித்து வரும் வீரராகவன் என்பதும், அவர் தற்போது வெளிநாட்டிலிருந்து வந்து ஊரில் விவசாயம் பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து வீரராகவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வீரராகவனின் அண்ணன் விஜயராகவன் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |