வீட்டின் மேற்கூரை ஜன்னலை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகாமையில் கைலாசபுரம் கிராமத்தில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வேடல் கிராமத்தில் இருக்கும் மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அதிலிருந்த 20,௦௦௦ ரொக்கப்பணம் மற்றும் 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் சோதனை செய்த போது மேற்கூரை பகுதியில் இருக்கும் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து பீரோவில் இருந்த 20,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.