Categories
உலக செய்திகள்

இசை அகாடமியில் இருந்த கருவிகளை அடித்து உடைத்த தலீபான்கள்.. வெளியான புகைப்படம்..!!

காபூலில் இருக்கும் ஒரு இசைப்பள்ளியில், தலிபான்கள் புகுந்து, அங்கிருந்த இசைக்கருவிகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால், அந்நாட்டு மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறினார்கள். எனினும் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றிய தலிப்பான்களால், பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் தேசிய எதிர்ப்பு முன்னணி படை போர் நிறுத்தத்தை அறிவித்தது.

எனவே, அந்த மாகாணத்தையும், மொத்தமாக தலீபான்கள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. எனவே, நாடு முழுவதும் கைப்பற்றி விட்டதால், தலீபான்கள் தங்களது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர். பெண்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளார்கள்.

இந்நிலையில், நாட்டில் இருக்கும் தேசிய இசை அகாடமிக்குள் தலீபான்கள் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளின் இசை வாத்திய கருவிகளை அடித்து உடைத்தார்கள். அதுமட்டுமன்றி, “இனி இசைக்கருவிகளின் மேல் கை வைத்தால், கையை உடைத்து விடுவோம்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த இசை அகாடமியில் தான், ஆப்கானிஸ்தானின் முதல் பெண்கள் இசை நிகழ்ச்சி, ஸோரா அரங்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |