தோப்பில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவலாபுரம் அருகாமையில் உமராபாத் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் வாணக்கார தோப்பில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் தோப்பில் சாராய விற்பனையில் ஈடுபட்ட செட்டு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.