உத்திர பிரதேசத்தில் நான்கு நாட்கள் மண்ணிற்குள் புதைந்து கிடந்த பெண் குழந்தை உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோகி. இவரின் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதையடுத்து அக்குழந்தையை புதைக்க மண்ணை தோண்டினார்.அப்போது அவரின் கைகளில் பானை ஒன்று தட்டுப்பட்டது. அந்தப் பானைக்குள் அழகிய பெண் குழந்தை ஒன்று மெலிதான குரலில் அழுதது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹிதேஷ் குமார் உடனடியாக அக்குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்.இதைத் தொடர்ந்து சுபாஷ் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் அபிநந்தன் சிங் கூறும்போது, “குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை உறவினர்கள் புதைக்க சென்ற இடத்தில், இக்குழந்தை உயிருடன் கிடைத்துள்ளது” என்றார்.மருத்துவர்கள் தரப்பில், “குழந்தை பிறந்து 30 வாரங்கள் இருக்கக்கூடும். குழந்தை ஒரு கிலோ 10 கிராம் எடையுள்ளது. மூன்று அல்லது நான்கு நாட்கள் புதையுண்டு பானைக்குள் இருந்திருக்கலாம்” என்றும் தெரிவித்தனர்.2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 862 பெண்கள் என்ற நிலை உள்ளதுநாட்டில் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக சட்டம், கொள்கைகள் தாராளமாக இருக்கிறது. இருப்பினும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்கிறது.