லண்டனில் கொரோனா தொற்று காரணமாக கிட்டத்தட்ட 18 மாதங்களாக வீட்டில் வேலை செய்து வந்த பொதுமக்கள் தற்போது அலுவலகங்களுக்கு செல்வதால் மீண்டும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லண்டனின் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக அந்தந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து கிட்டத்தட்ட 18 மாதங்களாக வீட்டில் வைத்து தங்களது அலுவலக வேலைகளை பார்த்து வந்த ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை செய்து வந்த ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு செல்கிறார்கள். இதனால் லண்டனில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததுபோல் சாலைகளில் மிகவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.