திடீரென வீட்டில் தீப்பிடித்த காரணத்தினால் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாக்கம் மேல்புதூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஜெயா தூங்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டில் தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால் அதற்குள் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.
இதில் வீட்டில் வைத்திருந்த மிக்ஸி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்ககளும் தீயில் வெடித்து சிதறியுள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை கொண்டு வந்து வீட்டின் மேல் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து இந்த விபத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் தெரியாததால் இது தொடர்பாக காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.