கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் ரங்கராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் டிரைவரான ராஜீவ் காந்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது.
அதன் பிறகு இடது பக்கம் இருக்கும் சர்வீஸ் சாலையில் கார் கவிழ்ந்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக காரில் சிக்கிய ராஜீவ் காந்தியை மீட்டதால் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பி விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.