ஹோட்டல் ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலை ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கலை ராஜ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து கலை ராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 21 ஆயிரத்து 330 ரூபாய் பணம், 7 பவுன் தங்க நகை போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹோட்டல் ஊழியர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.