Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்கள் தற்கொலை…. தகவல் வெளியிட்ட அமைச்சர்…. உண்மையை உடைத்த இங்கிலாந்த்….!!

ஆப்கனை விட்டு வெளியேறியதால் கஷ்டத்திலிருந்த சில ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கூற்று தவறானது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டு படைகள் அனைத்தும் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து இங்கிலாந்தின் ஜூனியர் பாதுகாப்பு அமைச்சர் sky நியூஸ்ஸிடம் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதால் மனமுடைந்த சில ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் அவர் கூறிய கூற்று தவறானது என்றும், எந்த ராணுவ வீரர்களும் ஆப்கானிஸ்தானின் நிலையை கண்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |