பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களில் பிடிபட்ட ஒருவரை அடுத்தாண்டு காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தவுள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டிலுள்ள பல பொது இடங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களில் ஒருவர மட்டும் தன்னுடைய வெடிகுண்டு பொருத்தப்பட்ட உடையை கழட்டி பொது இடத்தில் போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனை கண்ட காவல்துறை அதிகாரிகள் வெடிகுண்டு பொருத்தப்பட்ட கவச உடையை சோதனை செய்ததில் அதில் கோளாறு இருந்துள்ளது. அதன்பின்பு காவல்துறை அதிகாரிகள் அந்த சம்பவம் நடந்த 4 மாதங்களுக்கு பின்பாக வெடிகுண்டு படுத்தப்பட்ட கவச உடையை போட்டு விட்டு தப்பி ஓடிய நபரை கைது செய்துள்ளார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கிற்காக காவல்துறை அதிகாரிகள் கைது செய்த அந்த நபரை நீதிமன்றத்தின் முன்பாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஆஜர்படுத்தவுள்ளார்கள்.