ஆப்களை தற்போது ஆண்டு வரும் தலிபான்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை பாகிஸ்தான் நாட்டின் விமானப் படையுடன் கைகோர்த்து கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மட்டும் தலிபான்களின் கை வசம் வராமல் இருந்துள்ளது. மேலும் பள்ளத்தாக்கில் ஆப்கனின் துணை அதிபரான அம்ரூல்லா, அகமத் மசூத் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான தேசிய கிளர்ச்சிப் படைகளை உருவாக்கியுள்ளார்.
இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலிபான்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கையும் விடாது தங்கள் வசம் கடந்த திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலுள்ள ஆளுநர் வீட்டில் தலிபான்களுக்கு எதிரான தேசியக் கிளர்ச்சி படையினரை வைத்தே தலிபான்களின் கொடியை ஏற்றியுள்ளார்கள். இந்நிலையில் தலிபான் போராளிகள் பாகிஸ்தான் நாட்டின் விமானப்படையின் உதவியுடன் தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றியுள்ளார்கள் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.