Categories
உலக செய்திகள்

விசாரணைக்கு வரவுள்ள வழக்கு…. முதியோருக்கு விஷம் வைத்த செவிலியர்…. பின்னணியிலுள்ள பணம்….!!

ஸ்விட்சர்லாந்தில் பணத்திற்காக ஆசைப்பட்டு செவிலியர் ஒருவர் முதியவரை 3 முறை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் மிகவும் வசதியான பெண்மணி ஒருவர் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து இந்த வசதியான பெண்மணி செவிலியர் ஒருவரிடம் தன்னுடைய வங்கி கணக்கில் 80,739 பிராங்குகள் இருப்பதாகவும், அதனை தனது மறைவிற்குப் பிறகு நீயே எடுத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் பணத்திற்கு ஆசைப்பட்ட அந்த செவிலியர் பணக்கார பெண்மணியை 2 முறை விஷம் வைத்து கொல்வதற்கு முயன்றுள்ளார்.

ஆனால் அந்த 2 முறையும் அதிர்ஷ்டவசமாக அந்த பணக்கார பெண்மணி தப்பியுள்ளார். இதனையடுத்து 3 ஆவது முறையும் அந்த செவிலியர் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த பணக்கார பெண்மணி குடிக்கும் தேனீரில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். அதன்பின்பு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அந்த பணக்கார பெண்மணி வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து மீண்டும் முதியோர் இல்லம் திரும்பியுள்ளார்.

இதற்கிடையே செவிலியர் பணக்கார பெண்மணியின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 20,000 பிராங்குகளை எடுத்துள்ளார். இதுதொடர்பாக பணக்கார பெண்மணி காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் அந்த செவிலியரை கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

Categories

Tech |