மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள்.
உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். தொழில் வியாபாரத்தில் தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாய்வு ஏற்படுத்தக் கூடிய உணவுகளை எடுக்கக்கூடாது. செரிமான பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கிவிடும். பிரிந்து சென்றவர்கள் வந்து சேர்வார்கள்.
திட்டமிட்ட பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரச்சனைகள் நீங்கி இன்பம் பொங்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் கவனமாக செயல்பட வேண்டும். பேச்சில் அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். காதலில் உள்ளவர்கள் பக்குவமாக இருக்க வேண்டும். காதலில் பிரச்சினைகள் எழுந்தாலும், சரியாகிவிடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு இன்று கல்வியில் சிறப்பான நாள். கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி பெறும் நாள். மாணவர்களுக்கு இன்று அமைதியான சூழல் நிலவும். எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு பணியையும் செய்து வாருங்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.