தர்மபுரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதையடுத்து அவர் பேசியதாவது: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களின் நன்மைகள் குறித்து கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் அவர்களது வீடுகளுக்கு முன் விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும். இதையடுத்து பேசிய அவர் சட்டமன்றத்தில் நடப்பது இருபத்தி நான்காம் புலிகேசி காமெடி படம் போல் இருக்கின்றது என்று கிண்டலடித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி அன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தபாலில் அனுப்ப வேண்டும். ஸ்டாலினுக்கு பாஜக புரியவைக்கும் என்று இந்த கூட்டத்தில் அவர் பேசினார்.