செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நடப்பாண்டு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வருடத்திற்கு ஒருமுறை தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. ஆண்டுதோறும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஆண்டுநாடு கொரோனா காரணமாக தாமதமாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் https:neet.nta.nic.in என்ற தளத்திற்குச் சென்று ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். மேலும் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் முதுநிலை மருத்துவ தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://nba.edu.in இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.