Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு” நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…. கலந்துகொண்ட நிர்வாகிகள்….!!

ஈரோத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .

ஈரோடு மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் பி.மணிகண்டன் தலைமையில்,  முன்னாள் மாநிலத் தலைவர் ஆனந்த கணேஷ், மாநில பொருளாளர் கே.தங்கவேலு, இணைச்செயலாளர் ஷசீனாபானு ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான: பள்ளிக்கூடங்கள் திறந்து இருக்கும் நிலையில் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி, உளவியல் ரீதியான பாதிப்புகளை களைய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதனையடுத்து நடுநிலைப்  பள்ளிக்கூடத்திலும் அலுவலக பணியாளர், கணினி மற்றும்  உடற்கல்வி ஆசிரியை, அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் போன்ற பணியிடங்களை ஏற்படுத்தி ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். அதன்பின் காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் பணி இடங்களை நிரப்ப வேண்டும். மேலும் நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் அடைவுதிறன் அதிகமாக கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில ஆசிரியரை கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |