Categories
மாநில செய்திகள்

விரைவில் TNPSC தேர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு TNPSC மூலம் விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதிதாக அரசு பணியில் சேரும் பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |