Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல வருடங்களுக்குப் பிறகு….. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய அரசு ஊழியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை பகுதியில் 35 வயதுமிக்க இளம்பெண் ஒருவர் ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தார். இவர் சுனாமி பாதிப்பின் போது புராஜக்ட் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகுமார் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2007 ஆம் ஆண்டில் தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

அதன்பிறகு சிவகுமார் அந்த இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து விட்டு, தனக்கு அரசு வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். தற்போது சிவக்குமாருக்கு வேளாண் துறையில் துணை ஆய்வாளராக அரசு வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் சிவகுமார் அந்த இளம் பெண்ணை தனியாக விட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று சிவகுமார் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவக்குமாரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |