Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் தலையிட எந்த நாட்டிற்கும் உரிமை கிடையாது!”.. தலீபான்கள் எச்சரிக்கை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சனையில் தலையிடுவதற்கு பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளுக்கும் உரிமை கிடையாது என்று தலிபான்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருடங்களாக இருந்த அமெரிக்க படைகள், வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். தற்போது, தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ் இயக்கத்தின் தலைவரான, ஃபயிஷ் ஹமீது, காபூல் நகருக்குச் சென்று தலிபான்களுடன், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பில் பேசினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது தொடர்பில், தலிபான்களின் செய்தி தொடர்பாளரான  ஜபிபுல்லா முஜாகீத் தெரிவித்திருப்பதாவது, “பாகிஸ்தான் நாட்டின் தலைவர் எங்களிடம் பேசியது உண்மை.

நாங்கள் இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பில் பேசினோம். எனினும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சனையில் தலையிடுவதற்கு பாகிஸ்தான் போன்ற எந்த நாடுகளுக்கும் உரிமை கிடையாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாகிஸ்தான் அமைப்பினரை நாங்கள் சந்திப்பதற்கு அழைக்கவில்லை. அவர்கள் தான் எங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |