Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இருக்கும் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது கல்லூரி தலைவரான முத்துவாழி என்பவர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அதன் பின் இந்த சுகாதாரக் குழு சார்பில் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பயநாயக்கர்பட்டி பகுதியிலும் ஊராட்சி தலைவரான கணேஷ் குமார் என்பவரின் முன்னிலையில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Categories

Tech |