Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமிலத்தை கலந்தனரா….? இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

சென்னை மாவட்டத்திலுள்ள வேங்கைவாசல் ஊராட்சியில் இருக்கும் ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, ஏரியில் விஷத்தன்மை வாய்ந்த அமிலத்தை யாரேனும் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து செத்து கிடைக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, தண்ணீரை பாதுகாக்க வேண்டும். அதன் பின் அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |