Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இழுத்து சென்ற ராட்சத அலை….. கரை ஒதுங்கிய மாணவரின் உடல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராட்சத அலையால் இழுத்து செல்லப்பட்ட மாணவரின் உடல் கரை ஒதுங்கி உள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் அக்பர் தனது நண்பர்களான யுவராஜ், சதீஷ்குமார், ரீகன், சேக், தமிழ், புருஷோத்தமன் போன்றோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து யுவராஜ், ரீகன், புருஷோத்தமன், அக்பர் ஆகிய 4 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது மற்ற 3 பேர் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை குளித்து கொண்டிருந்த 4 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது.

இதனையடுத்து சக மாணவர்களின் சத்தம் கேட்டு மீனவர்கள் கடலுக்குள் குதித்து புருஷோத்தமன், ரீகன், யுவராஜ் 3 பேரையும் காப்பாற்றி விட்டனர். ஆனால் அக்பர் மாயமானதால் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் துறைமுகம் அருகில் அக்பரின் உடல் கரை ஒதுங்கியதாக கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |