கண்மாய்கரை பகுதியில் முதியவரின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் பகுதியில் கண்மாய்கரை நீரோடையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதியவரின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.