காட்டு யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் காய்ந்த மிளகாய்களை தீயில் போட்டு எரிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கோழிகண்டி, ஓட கொல்லி ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் காய்ந்த மிளகாய்களை தீயில் போட்டு எரிப்பதால் வரும் புகையால் கண் எரிச்சல் ஏற்பட்டு காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கின்றது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது முதுமலை கரையோரம் அகழி இருந்தாலும் காட்டு யானைகள் அதனையும் தாண்டி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் அதிகாரிகளின் ஆலோசனையின் படி எல்லையோரங்களில் இரவு முழுவதும் காய்ந்த மிளகாய்களை போட்டு எரித்து வருவதால் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதில்லை என தெரிவித்துள்ளனர்.