டிரோன் கேமரா மூலம் காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களாக 3 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனால் வனத்துறையினர் 4 கும்கி யானைகளின் உதவியோடு அந்த காட்டு யானைகளை விரட்டி அடித்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குண்டம்புழா ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்த காட்டு யானைகளை வனத்துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் காட்டு யானைகள் எந்த இடத்தில் நிற்கின்றது என ஆய்வு செய்துள்ளனர். அப்போது பாண்டியாறு பகுதியில் 3 காட்டு யானைகளும் நிற்பது தெரியவந்துள்ளது. இந்த காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.