Categories
உலக செய்திகள்

போதை தரும் நீராவி…. விமான நிலையத்தில் விற்பனை…. வியப்பூட்டும் தகவல்….!!

நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் பானத்தை சிங்கப்பூர் விமான நிலையத்தில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் நீராவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் அவ்வாறு நீராவி பிடிப்பதினால் கொரோனா தொற்றில் இருந்து தடுக்க முடியாது என்று சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் விளக்கமளித்தனர். இருந்தும் கூட மக்கள் வீடுகளில் நீராவி பிடிப்பதை நிறுத்தவில்லை. இது போன்ற சம்பவம் சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது. இது அனைவரையும் வியப்பூட்டியுள்ளது. அதாவது நீராவியை நுகர்ந்தாலே போதை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.

மேலும் இது இந்திய ரூபாயில் 70 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.  இதை அனைவராலும் வாங்க முடியாது. இந்த பானமானது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. குறிப்பாக இதனை வாங்கும் நபர்களுக்கு சிறிதளவு சுவை பார்க்க கொடுக்கப்படுகிறது. அதிலும் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த மதுபானம் தற்பொழுது விற்கப்படுகிறதா என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

Categories

Tech |