தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உதவி புரியுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு வழங்கும் சட்டம் 2016-ன் படி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 5 சதவீத ஒதுக்கீட்டின் கீழாக மாற்றுத்திறனாளி பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகளை பணியாளர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வருங்கால சேமிப்பு நல நிதி, பணியாளர்களுக்கான காப்பீட்டுத்தொகை ஆகியவற்றை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்கினை மாற்றுத்திறனாளிக்கான அதிகாரம் வழங்கும் துறையை செலுத்தி விடுவார்கள்.
இதனைப் போல் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற பணிக்கொடையை நிறுவனங்கள் செலுத்தும் தொகையில் முன்றில் 1 பங்கு தொகை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தொழிற்பயிற்சி அளித்தல் பணியில் சேர்த்துக் கொண்டால் பயிற்சி காலத்திற்கான உதவித்தொகைகளை மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் வழங்கும் துறையே செலுத்துகின்றனர். இதனையடுத்து இம்மாவட்டத்தில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மத்திய அரசின் ஊக்கத்தொகை சலுகைகள் பெற்று பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி தகுதியான மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவிடுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.