பணியில் நிரந்தரம் வேண்டும் எனக்கோரி அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின் வாரியத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு அரக்கோணம் விண்டர்பேட்டையில் இருக்கும் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரான கமலகண்ணன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் கூலியை உயர்த்தி தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி உள்ளனர்.