ஜப்பான் நாட்டில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டாரா கோனோ நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் பிரதமரான யோஷிஹிடே சுகா, பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே அந்நாட்டின், ஒரு செய்தி நிறுவனம் அடுத்த பிரதமராகக்கூடிய வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று தொலைபேசி வாயிலாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
எனவே, 1701 மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர், டாரா கோனோவிற்கு 32% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும், பாதுகாப்பு துறை முன்னாள் அமைச்சரான ஷிகெரு இஷிபாவிற்கு, 27% மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 19% மக்கள் வெளியுறவு முன்னாள் அமைச்சரான, ஃபுமியோ கிஷிடாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பல செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பிலும், இது போன்ற முன்னிலை தான் கிடைத்திருக்கிறது.