Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் குறைவாக இருக்கு…. பணி இடைநீக்கம்…. துணை பதிவாளர் உத்தரவு….!!

ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக புகார் வந்ததால் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மண்டலநாயனகுண்டாவில் நியாயவிலை கடை அமைந்திருகிறது. இந்நிலையில் அங்கே பல முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் துணை பதிவாளர் முரளிகண்ணன் அப்பகுதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் படி கூட்டுறவு சார்பதிவாளர் தர்மேந்திரன் திடீரென நியாயவிலை கடையில் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது நியாய விலை கடையில் இருக்கும் சர்க்கரை, பாமாயில், அரிசி போன்ற பொருட்கள் இருப்பு குறைவாக இருந்துள்ளது. இதனால் நியாய விலை கடை விற்பனையாளராக பணிபுரிந்த ஜெயகுமாரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்ய துணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |