காலாவதியான அனுமதி சீட்டுடன் 8 யூனிட் எம்.சாண்ட் மணல் வைத்திருந்த லாரி டிரைவரை வருவாய் துறையினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாசில்தார் செந்தில்வேல் மஊகன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் சேதுராமன், தோண்டி வருவாய் ஆய்வாளர் அமுதன், தேளூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் மணல் கொள்ளையை தடுக்க தேளூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் எம்.சாண்ட் மணலுடன் நின்ற லாரியை சோதனை செய்துள்ளனர்.
அப்போது காலாவதியான அனுமதி சீட்டு இருந்தது மட்டுமல்லாமல் 2 யூனிட் மணல் அதிகமாக அள்ளியதும் தெரியவந்துள்ளது. மேலும் லாரியை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் லாரி டிரைவரான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரை பிடித்து தொண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.